Skip to main content

ஹாலிவுட்டில் ஆல்பம் வெளியிடும் ஜி.வி.பிரகாஷ்!

Published on 29/08/2020 | Edited on 29/08/2020
gsgsd

 

 

ஹாலிவுட்டில் ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். 'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல்  ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்த பாடல்.  ஹை அண்ட் ட்ரை, ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட்  இரண்டையும் ஜிவி செய்துள்ளார். 

 

எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்து செல்லும்.  ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்தி சொல்கிறது இந்த பாடல். இந்த பாடல் ஜிவி பிரகாஷின் சொந்த ஸ்டூடியோவில், யெஹோவாசன் அல்காரால் கலவை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார். இவர் அடெல், டெய்லர் ஸ்விஃப்ட், கேடி பெர்ரி, மரூன் 5 உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார். ஒரு நடிகராக, இசையமைப்பாளராக, பாடகராக இருக்கும் ஜிவி, தனது கலை மூலமாக சர்வதேச அளவில் தனது ரசிகர்களிடம் தனக்கான ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளார். அசல் இசை மற்றும் கூட்டு முயற்சியைக் காட்டும் இந்தப் பாடல்கள் மூலம் தனது தாய்நாட்டுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட விரும்புகிறார் ஜிவி பிரகாஷ். இந்நிலையில் 'கோல்ட் நைட்ஸ்' ஆல்பத்தின் முதல் பாடல் வரும் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாரதிராஜாவிற்கு வில்லனாக நடித்துள்ளேன்” - ஜி.வி. பிரகாஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
gv prakash speech at kalvan audio launch

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா, "இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜி.வி. நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத் தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்" என்றார். 

நடிகர் ஜி.வி. பிரகாஷ், "இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

Next Story

போன சம்மருக்கு மிஸ்ஸிங்; இந்த கோடையில் களமிறங்கும் ஜி.வி பிரகாஷ்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
gv prakash kalvan movie trailer released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இதனிடையே, 'கள்வன்' படத்தில் ஜி.வி பிரகாஷோடு, பாரதிராஜாவும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவானா கதாநாயகியாக நடிக்க தீனா, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாத்திங்களில் நடித்துள்ளனர். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி.ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. மேலும் கடந்த வருட கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. 

gv prakash kalvan movie trailer released

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கும் பிறகு தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. ஏப்ரல் 4அம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.