சீனு ராமசாமி, ஜி.வி. பிரகாஷ் இணையும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

gv prakash

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின், தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து, நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிவருகிறார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடிக்கிறார். அவர், அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பானது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை (11.08.2021) வெளியாகவுள்ளது.

GV prakash seenu ramasamy
இதையும் படியுங்கள்
Subscribe