Advertisment

அமித்ஷா விருந்தில் கலந்து கொண்ட ஜி.வி. பிரகாஷ்

 gv prakash  meets amit sha

இரண்டு நாள் பயணமாக (10.06.2023 - 11.06.2023) தமிழகம் வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் பாஜகவின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார்.

Advertisment

இதையடுத்து நேற்று இரவு திரைத்துறை, விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரை சார்ந்த 24 பிரபலங்களைச் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்த இந்த விருந்தில் திரைத்துறை சார்பில், இயக்குநர் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் ஏ.ஆர். ராஜசேகரன், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் சந்தித்தனர். மேலும் தயாரிப்பாளர் ஐசரி கணேசும் கலந்து கொண்டார்.

Advertisment

Amit shah GV prakash
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe