gv prakash kumar starring rebel movie

Advertisment

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் உதவி இயக்குநராகபணிபுரிந்த சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் ‘பேச்சிலர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார். ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி. பிரகாஷ் பணிபுரிந்துள்ளஇப்படம் நாளை (3.12.2021) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="085adab8-7449-4448-b6f2-8e27eae0f22d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_26.jpg" />

இந்நிலையில்ஜி.வி. பிரகாஷ், தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி, அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கும் 'ரிபெல்' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைஸ்டூடியோக்ரீன் மற்றும்சி.வி. குமார் புரொடக்சன் நிறுவனங்கள் இணைந்துதயாரிக்கின்றன. 'ரிபெல்' படத்தின் பணிகள் இன்று (2.12.2021) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்துவருவதால் விரைவில் அடுத்தடுத்தஅறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.