Advertisment

"என் இசையில் பாதி பங்கு அவரைச் சேரும்" - ஜி.வி. பிரகாஷ் குமார்

gv prakash kumar speech at sardar success meet

Advertisment

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார்' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர் . இதில் கார்த்தி, இயக்குநர் மித்ரன், ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது இயக்குநர் மித்ரன் பேசுகையில், "இப்படத்தில் யாரும் சந்தோஷமாக வேலை பார்க்க முடியாது என்று லக்ஷ்மன் சாரிடம் கதை கூறும்போதே தெரியும். இப்படம் கதையிலிருந்து திரைக்கதையாக்கும்போதே கடினமாகத்தான் இருந்தது. கதை ஆக்குவதிலிருந்து சரியாக வருவதற்கு எழுத்தாளர்கள் மிகவும் உழைத்திருக்கிறார்கள். மேலும், இக்கதை கோர்வையாக வருவதற்கு ஜி.வி உதவினார்.

அனைத்து கோணத்திலும் மிகப் பெரிய உழைப்பு இருந்தது. எல்லோருக்கும் எளிமையாகப் புரிய வேண்டும். கதை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்கு அதிக உழைப்பு தேவைப்பட்டது. கார்த்தி சார், மேக்கப் போடுவதிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வருவது வரை அவருடைய ஈடுபாட்டை பார்த்து மிரண்டு போனேன். அவரின் கடின உழைப்பு இப்படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு பாடலுக்கு 7 மணி நேரம் செலவழித்து இப்பாடலை நானே பாடினால் தான் நன்றாக இருக்கும் என்று பாடினார். அவரின் அர்ப்பணிப்பு தான் இப்படம் நன்றாக வருவதற்கு முக்கிய காரணம் என்றார்.

Advertisment

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் கூறுகையில், "ஒரே வருடத்தில் 3 வித்தியாசமான படங்களில் நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் கார்த்தி. அவர் ஒரு பாடல் பாடினார். கிட்டதட்ட 7 மணி நேரம் ஆனது. ஆனால், இப்பாடலை எப்படி காட்சிப்படுத்த போகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இயக்குநர் எடுத்திருந்தார். மித்ரன் சவாலான இயக்குநர். ஒவ்வொரு காட்சிக்கும் இசை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாயிலேயே இசையமைத்து காட்டுவார். அவர் நினைத்தபடி வரும்வரை விடவே மாட்டார். பல பாடல்கள் இசையமைத்து முடித்தும் தூக்கி போட்டிருக்கிறோம். என் இசையில் பாதி பங்கு அவரை சேரும்" என்றார்.

'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தநிலையில் படக்குழு அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

GV prakash Sardar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe