gv prakash kumar sing the song in Etharkkum Thunindhavan movie

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில்நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c9969d8d-082b-43e3-9afa-20bd34bfda11" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_38.jpg" />

Advertisment

இந்நிலையில், படத்தின் பாடல் குறித்ததகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஒரு காதல் பாடலைப் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.இதுவரை ஜி.வி. பிரகாஷ் பாடிய அனைத்து காதல் பாடல்களும் கேட்பவர்களை மெய்மறக்கச் செய்து ஹிட்டடித்துள்ளதால், இந்தப் பாடல் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.