gv prakash kumar kalvan movie teaser released

இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறைகளிலும் பயணிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக சீனு ராமசாமியின் 'இடி முழக்கம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கெளதம் மேனனுடன் இணைந்து '13' என்ற படத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளராக தனுஷின் 'கேப்டன் மில்லர்', விஷாலின் 'மார்க் ஆண்டனி', சூர்யாவின் 'வாடிவாசல்' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றுகிறார்.

Advertisment

இதனிடையே, பி.வி.ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கள்வன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து பாரதிராஜாவும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இவானா கதாநாயகியாக நடிக்கதீனா,ஞானசம்பந்தன்உள்ளிட்ட பலர் முக்கியக் கதாத்திங்களில்நடிக்கின்றனர். டில்லிபாபு தயாரிக்கஜி.வி.பிரகாஷேஇசை பணிகளையும்மேற்கொள்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரதுகவனத்தை ஈர்த்தது.

Advertisment

இந்த நிலையில், 'கள்வன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனைசூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டீசரை பார்க்கையில் மலைவாழ் மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் வரும் கோடையில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், டீசரில் பழிவாங்குவது போல் ஒரு காட்சி வருகிறது. அப்போது "அசலூர்லகூட அவசரப்பட்டு கை வைக்கலாம். இது உள்ளூரு... ஆதராமேஇல்லாமல் பண்ணணும்" எனஜி.வி.பிரகாஷ் பேசும் வசனம் ரசிகர்களின்கவனத்தைப் பெற்று வருகிறது.