g.v prakash clashed with two big heros

Advertisment

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து திரையில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் 'ஈட்டி' பட இயக்குநர் ரவியரசு இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் நடித்திருக்கும் படம் 'ஐங்கரன்'. இப்படத்தினுடைய ட்ரைலர் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். காளி வெங்கட், அருள் தாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இப்படத்தை தற்போது 'ஏப்ரல் 28-ல்' ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான 'காத்து வாக்குல இரண்டு காதல்' படம் ஏப்ரல் 28-ல் வெளியாகவுள்ளது. ஹன்சிகாவின் 50-வது படமான 'மகா' படமும் அதே தேதியில் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் நடிகர் 'சிம்பு' கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் ஐங்கரன் இரண்டு பெரிய படங்களுடன் இணைந்து ரிலீஸ் ஆவதால் ஜீ.வி பிரகாஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.