/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/02_78.jpg)
இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக சீனு ராமசாமியின் 'இடி முழக்கம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கெளதம் மேனனுடன் இணைந்து '13' என்ற படத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளராக தனுஷின் 'கேப்டன் மில்லர்', விஷாலின் 'மார்க் ஆண்டனி', சூர்யாவின் 'வாடிவாசல்' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகன் மற்றும் இசை என இரண்டு பணிகளை மேற்கொள்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நட்மெக் புரொடக்சஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 'செத்தும் ஆயிரம் பொன்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெயர் பெற்றுக்கொடுத்த 'காக்கா முட்டை' படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த சூழலில் முதல் முறையாக ஜி.வி. பிரகாஷும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்துள்ளதால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)