gv prakash kayadu lohar starring immortal

ஏ.கே. ஃபிலிம் ஃபேக்ட்ரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் படம் ‘இம்மார்டல்’. ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படம் இளைஞன் வாழ்வில் தீடீரென நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் என்பதன் பின்னணி என்ன என்பதை மைய்யமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment

படத்தின் படப்பிடிப்பு, சென்னை, கேரளா முதலான பகுதிகளில் நடந்துள்ளது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் படம் என்பதால், படத்தில் சிஜி,விஷுவல் எஃபெக்ட்ஸ், காட்சிகள் அதிக அளவில் உள்ளது எனும் நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி திரை நட்சத்திரங்களான விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களின் கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.