Advertisment

போன சம்மருக்கு மிஸ்ஸிங்; இந்த கோடையில் களமிறங்கும் ஜி.வி பிரகாஷ்!

gv prakash kalvan movie trailer released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Advertisment

இதனிடையே, 'கள்வன்' படத்தில் ஜி.வி பிரகாஷோடு, பாரதிராஜாவும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவானா கதாநாயகியாக நடிக்க தீனா, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாத்திங்களில் நடித்துள்ளனர். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி.ஷங்கர் இயக்கியுள்ளார்.ஜி.வி.பிரகாஷ்இசை பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. மேலும் கடந்த வருட கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.

Advertisment

gv prakash kalvan movie trailer released

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கும் பிறகு தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. ஏப்ரல் 4அம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

GV prakash
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe