Advertisment

நடிகர் விஷாலுடன் மீண்டும் இணைந்த ஜி.வி பிரகாஷ்

gv prakash joins vishal starring Mark Antony movie

அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாகடிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார்.சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இப்படம் ஜனவரி மாதம் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடிக்கவுள்ளார். எனிமி பட தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது படத்தின் இசையமைப்பாளர் குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மார்க் ஆண்டனி படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisment

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு ஜிவிபிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் தற்போது நீண்ட வருடங்களுக்கு மீண்டும்விஷால் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

adhik ravichandran Mark Antony GV prakash actor vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe