GV Prakash joins Shah Rukh Khan?

Advertisment

இந்தியில் டாப் ஹீரோவாக இருக்கும் ஷாருக்கானுக்கு தமிழிலும் ரசிகர்கள் உண்டு. இவர் நடித்த பல படங்கள் தமிழில் டப் செய்து திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் பெயரிடாத படத்தில்நடித்து வருகிறார். இதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அடுத்து பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 'டன்கி' படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் 'டன்கி' படத்தை பற்றிய புது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கும் சூரரை போற்று இந்தி ரீமேக்கிலும் இவரேஇசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அதிகாரபூர்வமாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. ஜி.வி பிரகாஷ் குமார் இந்தியில் 'ஜோக்கர்' மற்றும் 'அக்லி' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.