/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1059.jpg)
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும்கங்கனாரணாவத்தமிழில் தாம்தூம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தாகட்' திரைப்படம் மோசமான வரவேற்பைப் பெற்று பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. 90 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ. 5 கோடி கூட வசூல் செய்யவில்லைஎனப்பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.இதனைத் தொடர்ந்து இழந்தமார்க்கெட்டைமீட்டெடுக்கநடிகைகங்கனாஅடுத்தாகபுதிய படம் ஒன்றை இயக்கி,நடிக்கவுள்ளதாககூறப்படுகிறது. இப்படம் இந்தியமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை 'எமர்ஜென்சி' என்ற பெயரில் உருவாக்ககங்கனாதிட்டமிட்டுள்ளாராம்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், "நடிகைகங்கனாவைசந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் கனவு படத்தில் பணிபுரிய ஆவலாக இருக்கிறேன்" என்று தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். ஆனால் அந்தபதிவில் எந்த படத்தில்பணிபுரியபோகிறார் என்ற அறிவிப்பைவெளியிடவில்லை. ஒருவேளைஎமர்ஜென்சிஎன்ற பெயரில்கங்கனாஇயக்கி நடிக்கும் படத்தில் ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவாராஅல்லது வேறு ஏதேனும்புதிய படமாகஇருக்குமா என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
Super happy meeting the most talented #KanganaRanaut … super excited to be working on her most ambitious magnum opus film … ?✨? pic.twitter.com/V8PX5Xq070
Follow Us