gvp

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி பின்னர் கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடித்து, இயக்கிய 'காஞ்சனா' படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது.

Advertisment

இதனால் 'காஞ்சனா' முதல் பாகத்தை இந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கும் வாய்ப்பு ராகவா லாரன்ஸிற்கு கிடைத்தது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

ராகவா லாரன்ஸ்இயக்கியிருக்கும் இந்தப் படம்,பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது அடுத்த படத்தின் வேலையைத் தொடங்கியுள்ளார். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படத்தின் நாயகனாக நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். தற்போது இந்த படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராகப் பணியாற்றுகிறார். லாரன்ஸ் மற்றும் ஜி.வி இணைவது இதுவே முதன்முறையாகும். நடிப்பில் கவனம் செலுத்திவந்த ஜி.விபிரகாஷ் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர விவரங்களை 29ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும், இந்தப் படத்தை யார் இயக்க இருக்கிறார்கள் என்கிற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.