வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இவர் 50 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். தமிழில் டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதை தொடர்ந்து பத்திற்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து தற்போது இசயமைப்பாளர் என்பதை தாண்டி நடிகராக வளம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது ஹாலிவுட்டிலும் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். ஹாலிவுட் இயக்குநர் ரிக்கி ப்ரூச்சல் இயக்கவிருக்கும் இப்படத்தை கைபா எனும் ஹாலிவுட் பட நிறுவனம் சார்பாக டெல் கணேசன் தயாரிக்கிறார்.

Advertisment

gv prakash

இவர் ஏற்கனவே ஹாலிவுட்டில் நடிகர் நெப்போலியன் நடித்த ‘டெவில்ஸ் நைட்’, ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். ட்ராப் சிட்டி என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் டி.ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ பதிவாக ஜிவி பிரகாஷ் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அறிவித்துள்ளார்.

இதனிடையே, நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 100 % காதல், அடங்காதே, ஜெயில் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. பேச்சிலர், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க யாருமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அசுரன், சூரரைப்போற்று உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.