/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/13_55.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின், தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து, நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிவருகிறார். இடிமுழக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடிக்கிறார். அவர், அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியராக நடிக்கிறார்.
கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில், மிகக் குறுகிய காலத்திலேயே மொத்த படப்பிடிப்பையும் படக்குழு நிறைவுசெய்துள்ளது. இடி முழக்கம் படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், "இடிமுழக்கம் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது. திருவிழா முடிந்து பள்ளிக்குச் செல்லப் போகும் மாணவனைப்போலச்சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்குத்தந்த சீனு ராமசாமி சாருக்கு நன்றி" என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)