GV Prakash helps 1year old child hospital treatment

Advertisment

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், திரைப்படங்களைத்தாண்டி சமூகம் தொடர்பான கருத்துகளை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருவார். மேலும் பண உதவி கேட்கும் சிலருக்கு அவர்களைத்தொடர்பு கொண்டு அவர்களின் தேவையை நிறைவேற்றுவார்.

அந்த வகையில் தற்போது 1 வயது குழந்தை மருத்துவ சிகிச்சைக்கு உதவியுள்ளார். எக்ஸ் தளத்தில் ஒரு நபர் அவருடைய அக்கா மகனுக்கு மூளை பக்கத்தில் கட்டி இருப்பதாகவும் அதைச் சரி செய்ய யாராவது பண உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் சிகிச்சை தொடர்பான விவரங்களையும் அந்தப் பதிவில் இணைத்திருந்தார். இதைப் பார்த்த ஜி.வி. பிரகாஷ் அந்த நபருக்கு ஆன்லைன் பரிவர்த்தனை தொடர்பாக 75 ஆயிரம் அனுப்பி உதவியுள்ளார். அந்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து, “என் பக்கத்திலிருந்து ஒரு சிறிய உதவி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ்நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தனுஷின் கேப்டன் மில்லர், விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றுகிறார்.