தமிழ் மற்றும் இந்தி மொழிகளில்பிசியாகநடித்து வரும் தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும்இப்படத்திற்குதமிழில் 'வாத்தி'எனத்தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சிமற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தைவெங்கிஅட்லூரிஇயக்குகிறார். சம்யுக்தாமேனன்கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'வாத்தி' படத்தின் புதியஅப்டேட்வெளியாகியுள்ளது. அதன் படி 'வாத்தி' படத்தின்இசைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஜி.வி.பிரகாஷ் தனதுட்விட்டர்பக்கத்தில் தெரிவித்துதனுஷுடன்இருக்கும் ஒரு புதிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில்தனுஷின்நடனத்துடன் கூடிய ஒரு குத்துப்பாட்டு உருவாகி வருவதாகவும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.