/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gv-prakash_2.jpg)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், பின்னர் திரைப்படங்களில் நாயகனாகவும் நடிக்க தொடங்கினார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அதில பல படங்கள் ரிலீஸுக்கு தயாரக உள்ளது. இதனை அடுத்து படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமும் செய்யப்பட்டு வருகிறார்.
அண்மையில் இவர் நடிப்பில் உருவான ‘பேச்சிலர்’ படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜிவி நடிப்பில் புதிய படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று சென்னையில் இப்படத்தின் படபூஜை நடைபெற்றது.
புதுமுக இயக்குனரான அகிலன், இந்த படத்தை காதல் கலந்த க்ரைம் த்ரில்லராக உருவாக்க உள்ளார். டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. நவீரா சினிமாஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)