soorarai potru

Advertisment

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'சூரரைப்போற்று'. சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாக இருக்கிற,முன்னணி நடிகரின் படமாகும்.

சூர்யாவுடன் அபர்ணா முரளி, கருணாஸ், மோகன் பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி ரிலீஸாகுகிறது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.விபிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி பலருக்கும் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

Ad

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் இருக்கும்போது ஜிவி பிரகாஷ் ட்ரைலருக்கு பி.ஜி.எம் பணிகள் முடித்துவிட்டேன். ட்ரைலர் விரைவில் வெளியாகிவிடும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.