/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-3_17.jpg)
'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்', 'செல்ஃபீ'' போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனிடையே 'ஈட்டி' பட வெற்றியை அடுத்து ரவியரசு இயக்கத்தில் 'ஐங்கரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 'காமன்மேன்' நிறுவனம் சார்பாக பி.கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே முடிவடைந்த நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது.
இந்நிலையில் 'ஐங்கரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில் இப்படம் மே மாதம் 5-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)