Advertisment

ஆதரவற்றோருக்கு உணவு, உடைகள் வழங்கிய ஜிவி பிரகாஷ் ரசிகர் மன்றத்தினர்!

vdsbhsb

Advertisment

ஜி.வி. பிரகாஷ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி ஏழை எளிய மக்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும், அனாதை இல்லங்களுக்கும் உணவுகள், உடைகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு கரோனா வராமல் தடுப்பதற்காக எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஹோமியோபதி மருந்துகளும், நாட்டு மருந்துகளும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

dbcxbxzb

மேலும், பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மளிகை சாமான்கள், பழங்கள், காய்கறிகள் வழங்கியும் மரக் கன்றுகளைக் கொடுத்தும், அதனை நட்டும் அனைத்து மாவட்டங்களிலும் நடிகர் ஜி.வி. பிரகாஷ்குமார் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பொதுமக்களுக்கு கரோனா வராமல் தடுக்கப் போராடும் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், காவல்துறையினர் ஆகியோரைக்கெளரவப்படுத்தும் விதமாக அவர்களின் கரங்களால் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களும், உடைகளும், மருத்துவ பொருட்களையும் வழங்க வைத்து அவர்களைக் கெளரவப்படுத்தினர். தன் பிறந்தநாளை முன்னிட்டு இதுபோன்ற நற்செயல்களைத் தொடர்ந்து செய்துவரும் மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஜி.வி. பிரகாஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

GV prakash
இதையும் படியுங்கள்
Subscribe