/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/117_27.jpg)
துல்கர் சல்மான் தற்போது ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்க ஐஸ்வர்யா லட்சுமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து துல்கர் சல்மான் தயாரிக்கிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை அடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் துல்கர் சல்மான். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை படக்குழு ஜி.வி.பிரகாஷின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வெளியிட்டுள்ளது. இப்படத்தின் மூலம் முதல் முறையாக துல்கர் சல்மான் படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபரில் தொடங்கும் எனவும் அடுத்த வருடம்கோடைக்கு திரையில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இயக்குநர் வெங்கி அட்லூரி, கடைசியாக தனுஷை வைத்து 'வாத்தி' படத்தை இயக்கிய நிலையில் அந்த படத்திலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)