Advertisment

"பொறுப்புள்ள மனிதனாக கடமையை செய்து வருவதாக உணர்கிறேன்" - ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

gv prakash birthday note

Advertisment

'வெயில்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் குமார்பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், அசுரன் என பல்வேறு ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார். பின்பு 'டார்லிங்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்போது 'இடிமுழக்கம்', 'கள்வன்' என ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்.

தனது இசைக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி பிரபலமாக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திரை பிரபலங்கள், அவர் பணியாற்றிவரும் திரைப்படங்களின் படக்குழுவினர்மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உங்கள் தோழனாக, பொறுப்புள்ள மனிதனாக, திரைக்கலைஞனாக நான் எப்போதும் என் கடமையை சரியாக செய்து வருவதாகவே, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உங்கள் ஒவ்வொருவரின் பேரன்பையும் பிறந்த நாள் வாழ்த்துகளாக பெறுவதன் மூலம் உணர்கிறேன். இடைவிடாத வெற்றித்தொடர் ஓட்டத்தை சாத்தியப்படுத்தும் அனைவரும் நன்றி" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisment

GV prakash
இதையும் படியுங்கள்
Subscribe