gv prakash and saindhavi sung song together by the film Vimal!

தமிழில் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷும் பிரபல பாடகி சைந்தவியும் 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் இணைந்து பல்வேறு பாடல்கள் பாடியுள்ளனர். அவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Advertisment

கடந்த சில மாதங்களாக ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்வதாகத்தகவல் பரவி வந்தது. பின்பு இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்தக் காதல் ஜோடியின் பிரிவு கோலிவுட்டில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரிந்த காதல் ஜோடி இணைந்து பாடிய பாடல் ஒன்று வெளியாகவுள்ளது.

Advertisment

‘கன்னி மாடம்’ படத்தின்வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர்போஸ்வெங்கட், விமலை வைத்து ‘மா.பொ.சி’ படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். இப்படத்தில், கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். ‘மா.பொ.சி’எனத்தலைப்பு வைத்திருந்த இப்படத்திற்கு திடீரென்று ‘சார்’எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தின்டீசர்அண்மையில் வெளியாகி நல்லவரவேற்பைப்பெற்றிருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வருகிற ஜூலை 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ‘பனங்கருக்கா’ எனத் தொடங்கும் இப்பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். மேலும், இப்பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். கருத்து வேறுபாட்டில் காதல் ஜோடியான ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடியிருக்கும் இப்பாடலுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisment