வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பல்வேறு வெற்றிப்பாடல்களைக் கொடுத்தவர் ஜி.வி. பிரகாஷ். இவர் பாடகியும் தனது பாலிய வயது தோழியுமான சைந்தவியைதிருமணம் செய்துக்கொண்டார்.

Advertisment

gv prakash

இதனையடுத்து ஜி.வி.பிரகாஷ் படங்களுக்கு இசையமைப்பதில் ஆர்வம் காட்டாமல் பல படங்களில் நாயகனாகவே நடித்தார். இதன்பின் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் மீண்டும் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷிற்கும் அவரது மனைவி சைந்தவிக்கும் நேற்று இரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. திரைத்துறை பிரபலங்கள் ஜிவி பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

ஜி.வி. பிரகாஷ், சூர்யாவை வைத்து உருவாகும் வெற்றிமாறன் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.