/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/187_24.jpg)
கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை என்ற இடத்தில் நேற்று ( 30.07.2024) நள்ளிரவு 1 மணிக்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ள சூரல்மலை என்ற இடத்திலும் அதிகாலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இவ்விரு இடங்களிலும் தொடர்ச்சியாக மீட்பு பணிக்குழு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த இரு நிலச்சரிவுகளில் தற்போது வரை 163-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நிலச்சரிவில் சிக்கி 216 பேரைக் காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், விஜய், ப்ரித்விராஜ் ஆகியோர் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனிடையே நடிகர் விக்ரம் கேரள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்கினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/184_23.jpg)
இந்த நிலையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இச்சம்பவம் தனக்கு வேதனை அளித்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “வயநாடு துயரம் , இயற்கை பேரிடர் எனும் போதிலும் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனையில் செய்வதறியாது தவிக்கிறேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுத்துறையை சார்ந்த பணியாளர்கள் , தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய களப்பணிக்கு அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளம் மீண்டு வர துணைநிற்போம்” என பதிவிட்டுள்ளார்.
Follow Us