gv prakash

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள படம் 'வாடிவாசல்'. சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி எடுக்கப்படவுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். இப்படம் குறித்தஅறிவிப்பு பல மாதங்களுக்கு முன்னரே வெளியாகி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. 'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

இதனால், சூர்யா, வெற்றிமாறன் இணையும் படம் எப்போது தொடங்கும் என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், வாடிவாசல் படத்தின் இசை குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'வாடிவாசல் படத்திற்கான இசைப் பணிகள் இன்று தொடங்கியுள்ளன' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

ஜி.வி.பிரகாஷின் இந்த ட்விட்டைக் கண்டு உற்சாகமான சூர்யா ரசிகர்கள் வாடிவாசல் எனும் ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.