gv prakash about good bad ugly response

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படம் இன்று(10.04.2025) வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. திரையரங்க வளாகத்திற்குள் வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்தும் கேக் வெட்டியும் மேளதாளத்துடன் அதிகாலை முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்களுடன் ஷாலினி மற்றும் அவரது மகள், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர்.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் வரவேற்பு குறித்து ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “படத்திற்கு கொடுத்த அற்புதமான வரவேற்புக்கும் பின்னணி இசைக்கு கொடுத்த சிறப்பான வரவேற்புக்கும் நன்றி. படம் பிளாக்பஸ்டர். அனைவருக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.