தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவலம் வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது விக்ரமின் 'தங்கலான்', தனுஷின் 'கேப்டன் மில்லர்', கார்த்தியின் 'ஜப்பான்' என பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதனிடையே ஹீரோவாகவும் 'அடியே', 'டியர்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது முதல் இசை நிகழ்ச்சியைவருகிற 27ஆம்தேதி கோவையில் நடத்தவுள்ளார். 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளநிலையில் இதனை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்ஜி.வி.பிரகாஷ். அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்தசெய்தியாளர்களின்கேள்விக்கு, "அது ரொம்ப பெரிய பட்ஜெட் படம். தனுஷ் சார் பண்ற மாதிரி சொல்லிருக்காங்க. நடந்துச்சுனாபெரிய சந்தோசம்தான். நானும் ஆர்வமாக காத்திருக்கிறேன். செல்வராகவன் சாரின்எண்ணம் மிகப் பெரியது. வரலாற்றையும் ஃபேண்டசியும்கலந்துஅழகாகக் கையாண்டிருந்தார். அந்த வகையில் அவரது அடுத்த வெர்ஷன் எப்படி இருக்கும் என்பதில் நானும் ஆர்வமாகத்தான் இருக்கிறேன்" என்றார்.
கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. செல்வராகவன் இயக்கியிருந்த இப்படத்திற்குஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லைஎனக் கூறப்பட்டாலும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாகஜி.வி.பிரகாஷின்இசையும்பரவலாகப் பாராட்டப்பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் எனவும் அதில் தனுஷ் நடிப்பதாகவும் கடந்த 2021ஆம் ஆண்டு புத்தாண்டன்று அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.