Advertisment

கமலின் ஆசியுடன் பணிகளைத் தொடங்கிய ஜி.வி. பிரகாஷின் 'கிங்ஸ்டன்'

gv prakash 25th film kingston update

Advertisment

இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி. பிரகாஷ், நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர்உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தனுஷின் கேப்டன் மில்லர், விக்ரமின் தங்கலான்உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றுகிறார்.

இந்த நிலையில் நடிகராக தற்போது 25வது படத்தில் நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இப்படத்தில் ஏற்கனவே ஜி.வி. பிரகாஷுடன் ஜோடியாக நடித்த திவ்ய பாரதி நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றி இசைப் பணிகளையும் மேற்கொள்கிறார். கமல் பிரகாஷ் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் பூஜையில் கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். படத்திற்கு கிங்ஸ்டன் எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

ACTOR KAMAL HASSHAN divya barathi GV prakash
இதையும் படியுங்கள்
Subscribe