Advertisment

அழுகிய நிலையில் மீட்டெடுக்கப்பட்ட இயக்குநரின் உடல்

guruprasad passed away

கன்னடத்தில் இயக்குநராக வலம் வருபவர் குரு பிரசாத். 2006ஆம் ஆண்டு மட்டா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், ட்டேலு மஞ்சுநாதா, டைரக்டர்ஸ் ஸ்பெஷல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதனிடையே நடிகராகவும் வசனகர்த்தாவாகவும் பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

Advertisment

இவர் கடைசியாக ரங்கநாயகா படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த மார்ச்சில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழுகியநிலையில் குரு பிரசாத் மீட்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச, அதனடிப்படையில் அக்கம் பக்கத்தினர் அவரை சடலமாக மீட்டுள்ளனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக குரு பிரசாத் இயக்கிய கடைசி படமான ரங்கநாயகா தோல்வியடைந்ததால், கடன் அதிகரித்து விட்டதாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.இவரது மறைவு கன்னடத் திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

passed away director
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe