கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஜோக்கர்' படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும்பிரபலமானகுரு சோமசுந்தரம் ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட', மாதவன் நடிப்பில் வெளியான 'மாறா', சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்டொவினோதாமஸ் நடிப்பில் வெளியான 'மின்னல் முரளி' படத்தில் வில்லனாக சிபு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஹீரோவாக நடித்த டொவினோ தாமஸ் நடிப்பை விட வில்லனாக நடித்த குரு சோமசுந்தரத்தின்நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில் குரு சோமசுந்தரம்அடுத்தாகஇயக்குநர்வெங்கட் புவன் இயக்கும் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். 'பெல்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நிதிஷ் வீரா மற்றும் ஸ்ரீதர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ப்ரோக்கன் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் திரைக்கு வரவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.