Skip to main content

‘கும்பலாத்தான் சுத்துவோம்... அய்யோ அம்மானு கத்துவோம்...’- திடீர் ட்ரெண்டான கானா

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

சென்னையில் ''பஸ் டே'' எனப்படும் பேருந்து தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பேருந்து தினம் கொண்டாடுவதாக கூறி ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசு பேருந்தில் மேற்கூரையில் அமர்ந்து பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சிலர்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னே பைக்கில் சென்ற மாணவர்கள் திடீரென பிரேக் போட்டதால் பேருந்து ஓட்டுனரும் சடாரென பிரேக் போட்டார். இதனால் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடாரென கீழே விழுந்தனர்.
 

gana song

 

 

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அனைத்து மாணவர்களும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பேருந்து தினம் கொண்டாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் பேருந்து தினம் கொண்டாடியது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துதிருந்தனர். பின்னர், ஒன்பது மாணவர்களை பச்சையப்பா கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
 

இந்த சம்பவம் நடந்தேறிய சமயத்தில், சென்னை கல்லூரி மாணவர்களிடையே பிரபலமாக இருந்த  ‘கும்பலாத்தான் சுத்துவோம்’ என்கிற கானா பாடலும் ட்ரெண்டானது. பேருந்து தினத்தை கொண்டாடிய மாணவர்களை கலாய்க்கும் விதத்தில் இந்த பாடலை சேர்த்து வீடியோக்கள் சமூக வலைதளத்தில் சூழ. இந்த கானா பாடல் மட்டும் தனியாக ட்ரெண்டாக தொடங்கியது. சினிமாக்களில் வரும் வீடியோ பாடல்களுடன் இந்த பாடலை சிங்க் செய்து பரவியது. தற்போது யூ-ட்யூப்பில் இந்த பாடலின் வீடியோ 18 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பாடலை எழுதி பாடியிருப்பவர் கானா ஸ்டீப்பன் என்ற கானா பாடும் பச்சையப்பா கல்லூரி மாணவர் ஒருவர். இதற்கு முன்னர்  ‘மைமா’ என்றொரு கானா பாடலும் யூ-ட்யூபில் பிரபலமானது. அது சுமார் 65 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

தமிழ் சினிமாவில் கானாவை அறிமுகப்படுத்தியது இசையமைப்பாளர் தேவா. ஆனால், அவர் சினிமாவிற்கு ஏற்றார்போல உண்மையான கானாவை காட்டாமல் ஓரளவிற்கு சினிமாத்தன்மையுடன் அமைத்திருப்பார். அட்டக்கத்தி போன்ற படங்களுக்கு பின்னர்தன் தமிழ் சினிமாவில் உண்மையான கானாவும் இடம்பெற்றது. தற்போது அது சமூக வலைதளங்களில் உதவியுடன் நன்கு பரவி வருகிறது. கிட்டத்தட்ட அமெரிக்காவில் ஹிப்ஹாப் எப்படி பரவி, தற்போது அது ஒரு மிகப்பெரிய கலாச்சாரமாக இருக்கிறதோ. அதுபோல இதுவும் மாறும் சூழல் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''பஸ் டே'' கொண்டாட்டம்... 9 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு!!

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

சென்னையில் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் தொடர்புடைய 9 மாணவர்களை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமான பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

Bus Day' celebration ...9 students sued by police


சென்னையில் ''பஸ் டே'' எனப்படும் பேருந்து தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பேருந்து தினம் கொண்டாடுவதாக கூறி ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசு பேருந்தில் மேற்கூரையில் அமர்ந்து கல்லூரி மாணவர்கள் சிலர்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னே பைக்கில் சென்ற மாணவர்கள் திடீரென பிரேக் போட்டதால் பேருந்து ஓட்டுனரும் சடாரென பிரேக் போட்டார் இதனால் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடாரென கீழே விழுந்தனர்.

Bus Day' celebration ...9 students sued by police


இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அனைத்து மாணவர்களும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பேருந்து தினம் கொண்டாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் பேருந்து தினம் கொண்டாடியது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த  நிலையில் 9 மாணவர்களையும் பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

 

 

 

 

Next Story

சென்னையில் ''பஸ் டே'' என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்... எச்சரித்த காவல்துறை!!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

 

சென்னையில் கல்லூரி தொடங்கிய நாளிலேயே கல்லூரி மாணவர்கள் பேருந்து தினம் என்ற பெயரில் மாநகர பேருந்துகளை சிறைபிடித்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டனர். இப்படி வரம்பு மீறி அட்டகாசத்தில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பில் சிக்கல் ஏற்படும் என மாணவர்களை எச்சரித்து அனுப்பியது காவல்துறை. 

 

College students celebrate 'Bus Day' in Chennai... Police warning

 

கோடை விடுமுறை முடிந்து கலை கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை செனாய் நகர் புல்லா அவென்யூவில் 40எ என்ற மாநகர பேருந்தை பயச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிறைபிடித்தனர். பேருந்தின் முன்பக்கம் பேனர் கட்டிய மாணவர்கள் பேருந்தில் ஏறிக்கொண்டதோடு மட்டுமின்றி பேருந்தின் மேற்கூரையில் ஏறிக்கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தின் முன்னே பைக்கில் கூச்சல் எழுப்பிக்கொண்டே சென்ற மாணவர்கள் திடீரென பிரேக் போட பேருந்து ஓட்டுனரும் பிரேக் போட்டார். இதனால் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ரகளை செய்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடார் என்று கீழே விழுந்தனர்.

 

College students celebrate 'Bus Day' in Chennai... Police warning

 

தகவல் தெரிந்து அங்கே சென்ற காவல்துறையினரை பார்த்ததும் எல்லா மாணவர்களும் ஓட்டம் பிடிக்க சிக்கிய 13 பேருக்கு அட்வைஸ் சொல்லி அனுப்பி வைத்தது காவல்துறை. அதேபோல் ராயப்பேட்டை அருகே 21 எண் பேருந்தை சிறைபிடித்து பேருந்தின் மீது ஏறியபடியும் ஜன்னல் கம்பிகளை பிடித்தபடியும் தொங்கிக்கொண்டே பயணம் செய்தபடி அட்டகாசம் செய்தனர்.

அதேபோல் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்னை மெரினா சாலையில் 60 எண் கொண்ட பேருந்தில் அட்டகாசம் செய்தபோது 10 க்கும் மேற்பட்டவர்களை அண்ணா சதுக்கம்  போலீசார் மடக்கி பிடித்தனர்.  அதேபோல் அயனவரத்தில் பேருந்து நாள் கொண்டாட பேனருடன் நின்றிருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

College students celebrate 'Bus Day' in Chennai... Police warning

 

பேருந்து தினம் என்று இதுபோல் அட்டகாசம் செய்யும் கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு கல்லூரிக்கு தெரிவித்து தற்காலிக நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. இதனால் பின்னாளில் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் வரும் எனவும் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.