/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/44_77.jpg)
சாய் பல்லவி 'கார்கி' படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' படத்தில் நடித்து வருவதாகவும்தகவல் வெளியாகியுள்ளது. இதில் பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சாய் பல்லவி மீது க்ரஷ் இருப்பதாக பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவய்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகத்தில் பேசிய அவர், "எனக்கு சாய் பல்லவி மீது க்ரஷ் உள்ளது. அவரின் ஃபோன் நம்பரும் என்னிடம் உள்ளது. ஆனால், அவரை அணுகும் தைரியம் என்னிடம் இல்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை மற்றும் நடனக் கலைஞர். இது ஒரு க்ரஷ் மட்டுமே. அதற்கு மேல் எதுவும் இல்லை. என் வாழ்க்கையில் எப்போதாவதுஅவருடன் ஒரு படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால்நான் மகிழ்ச்சியாக இருப்பேன். ஒரு விஷயம் நடக்கவிருந்தால் அது நடக்கும். அது நடக்கவில்லை என்றால்அது நடக்காது. ஆனால், ஒரு நல்ல நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். அதில் தவறில்லை" என்றுள்ளார்.
குல்ஷன் தேவய்யாபாலிவுட்டில் பல படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டு நடிகை கல்லிர்ரோய் டிசியாஃபெட்டா (Kallirroi Tziafeta) என்ற நடிகையை திருமணம் செய்தார். பின்பு 2020 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)