கரோனா பாதிப்பால் தேசிய ஊரடங்கு கடந்த இரண்டு மாதங்களாக அமலில் உள்ளது. அதற்கு முன்பிலிருந்து சினிமா திரையரங்கம், மால் போன்ற பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுவிட்டன. தற்போது லாக்டவுன் எடுக்கப்பட்டாலும், பொழுதுபோக்கு இடங்கள் மீண்டும் திறப்பது எப்போது என்பது பலருக்கும் கேள்வியாகவே உள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இதனால் ரிலீஸுக்குத் தயார் நிலையிலுள்ள படங்களை ஓ.டி.டி. பிளாட்ஃபார்மில் ரிலீஸ் செய்யத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே பெரும் சர்ச்சை உருவானது. இருந்தபோதிலும் ஐந்து படங்கள் வரிசையாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதேபோல பாலிவுட்டிலும் தயார் நிலையிலுள்ள பெரும் பட்ஜெட் படங்களை ஓ.டி.டி. பிளாட்ஃபார்மில் வெளியிட தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்நிலையில் ஆயுஷ்மான் குரானாமற்றும் அமிதாப் பச்சனின் நடிப்பில் சுஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குலாபோ சிதாபோ' படம் அமேசான் ப்ரைமில் ஜூன் 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.