/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madhavan son.jpg)
மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதவன். தொடர்ந்து தமிழ், இந்தி மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். நீச்சலின் மீது ஆர்வமாக இருக்கும் இவரது மகன் வேதாந்த் மாதவன், நீச்சல் போட்டிகளில் தொடர்ந்து பல பதக்கங்களைக் குவித்து வருகிறார். இதனிடையே 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக வேதாந்த் மாதவன் கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக பயிற்சி மேற்கொள்ளவும் தன் மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் தனது குடும்பத்துடன் துபாய்க்கு குடிபெயர்ந்துள்ளார் மாதவன். சமீபத்தில் டென்மார்க் தலைநகரில் நடந்த டேனிஷ் ஓபன் 2022 நீச்சல் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வேதாந்த் மாதவனுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் வேதாந்த மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டியில், "என் அப்பாவின் நிழலில் நான் வாழ விரும்பவில்லை. எனக்கென ஒரு பெயரை உருவாக்க விரும்புகிறேன். என் பெற்றோர்கள் என்னை எப்போதும் நன்றாகக் கவனித்து வருகிறார்கள். எனக்காக துபாய்க்கு குடிபெயர்ந்தது, என் பெற்றோர்கள் செய்த பெரிய தியாகம்" என உருக்கமாகக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)