ADVERTISEMENT

சோனு சூட்டை கௌரவித்த ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம்!

10:31 AM Dec 05, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் சோனு சூட்டை கௌரவிக்கும் விதமாக கலை மற்றும் மனிதநேயம் துறைக்கு ஆந்திராவில் உள்ள ஒரு ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் அவரது பெயரைச் சூட்டியுள்ளது.

நடிகர் சோனு சூட் கரோனா கால ஊரடங்கின்போது பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். வெளியூரில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வழிவகை செய்தது, விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது, ஸ்பெயின் நாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் சென்னை திரும்ப விமான வசதி ஏற்படுத்திக்கொடுத்தது, சண்டிகர் மாநிலத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கியது ஆகியவை பலரது பாராட்டையும் பெற்றன. அவரால் பலனடைந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்து வரும் இன்றைய சூழலிலும், சமூக வலைதளம் வாயிலாக தன்னிடம் உதவி கோருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்து வருகிறார். இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் செயல்பட்டு வரும் சந்திரா ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், நடிகர் சோனு சூட்டின் மனிதநேயப்பண்பை கவுரவிக்கும் விதமாக அந்நிறுவனத்தின் கலை மற்றும் மனிதநேயம் துறைக்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளது. இதனையடுத்து, சந்திரா ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT