The great actress who acted in MGR and Rajini films has passed away

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான 'விவசாயி' படத்தில் அறிமுகமானவர் ரங்கம்மாள். தொடர்ந்து பல மொழிகளில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்களிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகளில் நடித்தும் பிரபலமானார். சென்னையில் வாடகை வீட்டில் வசித்துவந்த இவர் பட வாய்ப்பு கிடைக்காமல் வறுமையில் வாடி வந்தார். இதன் காரணமாக தனது சொந்த ஊரான கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையத்தில் குடியேறினார். சமீபத்தில் ரங்கம்மாள் பாட்டியின் மகன் ராஜகோபால், "எனது தாய்க்கும் சினிமா உலகில் இதுபோன்று வறுமையில் வாடும் சக நடிகர்களுக்கும் நடிகர் சங்கம் உதவ முன்வர வேண்டும்" என கூறி இருந்தார்.

Advertisment

இந்நிலையில் 85 வயதான ரங்கம்மாள் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment