ரூசோ பிரதர்ஸிற்கு தனுஷ் வைத்துள்ள சர்ப்ரைஸ்

 'the gray man' movie star Dhanush has a surprise for russo Brothers

தனுஷ்ஹாலிவுட்திரையுலகில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'திகிரேமேன்'.அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியரூசோபிரதர்ஸ்இப்படத்தை இயக்குகின்றனர்.கிறிஸ்ஈவான்ஸ்,ரயன்காஸ்லிங்இவர்களுடன் இணைந்துதனுஷும்இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் குறிப்பிட்ட திரையரங்குகளில் வருகிற 15-ஆம் தேதியும்,நெட்ஃப்ளிக்ஸ்ஓடிடிதளத்தில் வருகிற 22-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. அதனால் படக்குழு தற்போதுப்ரோமோஷன்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர் படக்குழு. இந்நிலையில் இந்தியாவில் மும்பையில் நடக்கவுள்ள 'திகிரேமேன்' படத்தின்பிரீமியர்நிகழ்ச்சிக்காக விரைவில் இந்தியா வரவுள்ளனர்ரூசோபிரதர்ஸ். இதனைஅதிகாரப்பூர்வமாகதெரிவித்துதனுஷிடம்உரையாடும் ஒருவீடியோவையும்பகிர்ந்துள்ளார்கள் படக்குழு.

அந்தவீடியோவில்தனுஷ் , "இப்படத்தில்ஆக்ஷன், அற்புதமானஸ்டண்ட்காட்சிகள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளன. அற்புதமான நபர்கள் நிறைந்த இப்படத்தில் பணியாற்றியுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயம் இப்படம்ரசிகர்களுக்குபிடிக்கும் என நம்புகிறேன்.ரூசோபிரதர்ஸுக்குஒரு அறிவிப்பு உள்ளது. ஆனால் அதை அவர்கள், நான் பணிபுரிந்த இரண்டு திறமையான நபர்களிடமிருந்துஇங்குகேட்பது நல்லது"எனத்தெரிவித்துள்ளார். மேலும்ரூசோபிரதர்ஸ், "எங்கள் நண்பர்தனுஷைசந்திக்க இந்தியா வருகிறோம். இந்தியா வருவதில் எங்களுக்கு மகிழ்ச்சி, விரைவில் சந்திப்போம்" என அந்தவீடியோவில்தெரிவித்துள்ளனர்.

actor dhanush
இதையும் படியுங்கள்
Subscribe