Skip to main content

புகழ்பெற்ற பாடகர் கரோனாவால் மரணம்!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020
troy sneed


உலகம் முழுவதும் கரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் ஒருசில மாநிலங்களை தவிர்த்து, பல மாநிலங்கள் இந்த நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருகிற மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.


இந்த நோயினால் பல பிரபலங்களும், கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட புகழ்பெற்ற  பாடகர் டிராய் ஸ்னீட் தற்போது மரணம் அடைந்துள்ளார். 

இவர் பக்தி பாடல்களுக்காக 'கிராமி' விருதுக்கு பரிந்துரைப்பட்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் வசித்து வந்த அவர் 52-ஆம் வயதில் இறந்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்