கிளாசிக்கல் டான்சராக இருந்து நடிகையாக மாறியவர் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி. மலையாளத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான ‘ஹாப்பி வெட்டிங்’ படத்தில் திரைத்துறையில் நுழைந்தார். தொடர்ந்து ‘லக்ஷ்யம்’, ‘மேட்ச்பாக்ஸ்’ உள்ளிட்ட சில படங்கள் நடித்திருந்தாலும் 2019ஆம் ஆண்டு ஃபகத் ஃபாசிலுக்கு மனைவியாக நடித்த ‘கும்பலாங்கி நைட்ஸ்’ மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
பின்பு பல்வேறு படங்களில் நடித்த அவர், கடைசியாக அங்கு ‘எக்ஸ்ட்ரா டீசண்ட்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தமிழில் ‘பறந்து போ’ படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த நிலையில் கிரேஸ் ஆண்டனி, தனக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். முதலில் கணவரின் புகைப்படத்தை வெளியிடாத அவர், எந்த கொண்டாட்டமும் மக்களும் இல்லாமல் எளிய முறையில் நடந்ததாக தெரிவித்தார்.
பின்பு சில மணி நேரங்களில் திருமணப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் 9 ஆண்டுகளுக்கு பிறகு இது நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கிரேஸ் ஆண்டனிக்கு உன்னி முகுந்தன், சன்னி வெய்ன், மாளவிகா மேனன், ரஜிஷா விஜயன், நைலா உஷா, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Follow Us