/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/GR.jpg)
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வில் எழுத்தாளர் ஜி.ஆர். சுரேந்திரநாத் பேசியதாவது, “இந்த தீராக் காதல் கதையை உருவாக்கியதே ஒரு தனிக் கதை. நானும்ரோகினும் 'கும்பளாங்கி நைட்ஸ்' படம் பார்க்கப் போனோம். அப்போது ரோகின் இந்த மாதிரி படம் தமிழில் பண்ண வேண்டும் என்றார். எழுத்தாளருக்கு கிரடிட் தந்தால்அது நடக்கும் என்றேன். நான் தர்றேன் என்றவர், இப்படத்தில் திரைக்கதை, வசனம் தனியாக கிரடிட் தந்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி.
முன்பு எக்ஸ் லவ்வர் சந்திப்பது மிக அரிது. ஆனால் இந்த ஜெனரேஷனில் மனைவியை விட, எக்ஸ் லவ்வருடன் தான் டச்சில் இருக்கிறார்கள். இந்தப் படம் நடக்கும்போது, என் தாய் தந்தையரை உடல்நிலை காரணமாக இழந்தேன். பணத்தின் மீது உறவின் மீது என எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்தேன். ஆனால் நம்பிக்கை இழக்காத ஒன்று இந்தப் படத்தின் கதைதான். இந்தக் கதை உணர்வுகளைநடிகர்கள் நன்றாக நடித்தால் தான் ரசிகர்களிடம் போய்ச் சேரும். ஜெய், ஐஸ்வர்யா, ஷிவதா மூவரும் அற்புதமாக நடித்துள்ளனர். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)