gp muthu speech at sunny leone movie press meet

வீரா சக்தி மற்றும் கே.சசிகுமார் ஆகியோர் தயாரிப்பில் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு டிக்டாக் மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து நடித்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப்பெற்றது. வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவின்செய்தியாளர்கள் சந்திப்பு நடந்துள்ளது. இதில் சதிஷ், சன்னி லியோன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Advertisment

அப்போது ஜி.பி.முத்து பேசுகையில், "நண்பர்களே... இந்தப் படத்தில் என்னை முதல் முதலில் நடிக்க வைத்துள்ளார்கள். எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்துள்ளார்கள். படத்தில் கிளுகிளுப்பான காட்சிகள் நன்றாக இருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே பேசினார். இவரது பேச்சு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.