Skip to main content

"மாமா குட்டி கதாபாத்திரம் தான் எனக்கு புடிச்சிருந்துச்சு.." - ஜி.பி.முத்து

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

gp muthu speech in love today 100 day function

 

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சக்கைப்போடு போட்டு தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. மேலும் இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சி நடந்து கொண்டு வருகிறது. 

 

இந்த நிலையில் இப்படம் வெற்றிகரமாக 100வது நாளைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக படத்தின் 100வது நாள் வெற்றிவிழாவை படக்குழு நடத்தியுள்ளது. அதில் படக்குழுவினருடன் பலரும் கலந்த கொண்டு பேசினர். அப்போது நடிகர் ஜி.பி.முத்து பேசுகையில், "படத்தின் ப்ரோமோஷனுக்கு என்னை கூப்பிட்டாங்க. நான் யோசித்தேன். அப்போது லெட்டர் மட்டும் வந்து படித்தால் போதும் என்று சொன்னாங்க. அதை செய்தேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. படத்தில் எனக்கு மாமா குட்டி கதாபாத்திரம் தான் எனக்கு புடிச்சிருந்துச்சு. அது அழகாக இருக்கு. லவ் டுடே படம் தான் நான் ரிவியூ பண்ண முதல் படம்" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்