gp insulted in nayanthara connect movie preview show

'ரௌடி பிக்சர்ஸ்' தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' படம் இன்று (22.12.2022) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'மாயா' திரைப்படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், ஹனியா நபிஷா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

இதனிடையே 'கனெக்ட்' பட ப்ரீவியூ காட்சிக்கு யூட்யூபர் மற்றும் நடிகரான ஜி.பி. முத்துவை படக்குழு அழைத்துள்ளனர். ஆனால் ஜி.பி. முத்து தன்னை அவமானப்படுத்தியுள்ளதாகக் கூறி பாதியிலேயேவெளியேறியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நயன்தாரா தன்னுடன் படம் பார்க்க விரும்புவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னை அழைத்தனர். ஆனால் திரையரங்கில் எங்கேயோ ஒரு இடத்தில் உக்கார வைத்தனர். அதனால் அங்கிருந்து வந்துவிட்டேன். ஆனால் கோபமாக வரவில்லை.

Advertisment

அங்கிருந்த பவுன்சர்கள் ச்சீப்பாக நடந்து கொண்டார்கள். தூரப் போன்னு சொல்லிட்டாங்க. எனவே நான் வெளியேறிவிட்டேன். பின்பு விக்னேஷ் சிவன் தன்னை போனில் அழைத்துப் பேசினார். நான் பாதி தூரம் கிளம்பி வந்துவிட்டேன். அதனால் இன்னொருமுறை சந்திப்போம் எனச் சொல்லிவிட்டேன்" எனப் பேசினார்.