Advertisment

முரட்டு மீசை... வித்தியாசமான கெட்டப்... ; அருள்நிதியின் புதுமை கூட்டணி

gowthamraj directing Arulnithi next film

Advertisment

அருள்நிதி இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் 'டைரி'படத்திலும், அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 'தேஜாவு'படத்திலும், விஜய் குமார் இயக்கத்தில் 'டி பிளாக்'படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த மூன்று படங்களின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில்அடுத்தடுத்தமாதங்களில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அருள் நிதி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அருள்நிதிஅடுத்ததாக ராட்சசி படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர்கௌதம் ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, டி இமான் இசையமைக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட அருள்நிதிபடத்தில் தன்னுடைய கெட்டப்பையும் வெளியிட்டுள்ளார். அதில் கிராமத்து இளைஞனாக முரட்டு மீசையில் படு மாஸாக தோன்றியுள்ளார்.

arulnithi d block movie dejavu
இதையும் படியுங்கள்
Subscribe