கெளதம் கார்த்திக், தோல்விகள்... வெற்றிகள்... தோல்விகள் என மாற்றி மாற்றி வந்தாலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடிக்கும் ஆக்டிவ் இளம் நாயகனாகிவிட்டார். இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். சமீபத்தில் இவரும் இவரது தந்தை கார்த்திக்கும் சேர்ந்து நடித்த மிஸ்டர்.சந்திரமௌலி திரைப்படம் கலவையான கமெண்ட்களை பெற்றாலும் அந்தப் படத்தில் கெளதம் கார்த்திக்கின் நடிப்பு நன்கு மெருகேறியிருக்கிறது என்று படம் பார்த்தவர்களாலும் விமர்சகர்களாலும் கூறப்படுகிறது.
கௌதம், நக்கீரன் ஸ்டுடியோ (NAKKHEERAN STUDIO) யூ-ட்யூப் சானலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், "என் ஸ்கூல் டேஸ்ல எனக்கு சிம்ரன்தான் ரொம்பப் பிடிக்கும். அவுங்க மேல எனக்கு பெரிய க்ரஷ். அவங்களோட டான்ஸ், ஸ்டைல், க்யூட்னஸ் இப்படி எல்லாம் பிடிக்கும். அவங்க நிக்கிறதே ஒரு ஸ்டைல்தான்" என்றார்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
"இப்போ அவங்க உங்களுக்கு அம்மாவா நடித்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு?" என்று நாம் கேட்க, உடனே "மனசு தாங்காது பாஸ்... தாங்கவே தாங்காது" என்றார் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு.
இன்னும் செம ஜாலியான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். பேட்டியின் வீடியோ...
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/S9P7QLMJyyI.jpg?itok=Cx8tEPU0","video_url":" Video (Responsive, autoplaying)."]}