பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியா முன்னணி கதாபத்திரத்தில் நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் உள்ள மூன்று கல்லூரிகளில் காற்று மாசுக்கு நடுவே இடையூறு இல்லாமல் நடந்து வருகிறது.

gowri

Advertisment

Advertisment

இதைதொடர்ந்து படக்குழு வரும் நவம்பர் 27ஆம் தேதியோடு டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சிக்மகளூர் செல்லவிருக்கின்ற நிலையில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை கெளரி கிஷன் இப்படத்தில் புதுவரவாக இணைந்துள்ளார். முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இவரின் காட்சிகள் விரைவில் படமாக்கப்படவுள்ளன. மேலும் இதுகுறித்து அவர் பேசியபோது... ''விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருடைய ஆசிர்வாதத்தால் இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்றார்.

Seshan